Tuesday, February 17, 2009

525. சுப்பிரமணிய சுவாமியைத் தாக்கி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் அராஜகம்

இன்று, ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, அவரது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்கள், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அராஜகத்தில் ஈடுபடுவது, கடுமையான கண்டனத்துக்குரியது. சமூகத்தில், சட்டத்தை மதித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழக்கறிஞர்கள், பொது மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் மரியாதையை குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டுள்ளனர்.

பொதுவாகவே, இவர்களின் சமீபகால நடவடிக்கைகள் எதுவும் சிலாக்கியமாக இல்லை. எதற்கெடுத்தாலும், வேலை நிறுத்தம், நீதிபதிகளையே கேரோ செய்தல் என்று பலவற்றைக் கூறலாம். அரசியல் கட்சிகளை சார்ந்து பல வழக்கறிஞர்கள் செயல்படுவதே இதற்கு முக்கியக் காரணம். வழக்கறிஞர் தொழில் என்பது அரசியல் சாரா தொழிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

சு.சுவாமியின் ஈழப்பிரச்சினை குறித்த கருத்துகள் எனக்கும் ஏற்புடையதல்ல. சில சமயங்களில் உளறுகிறார் என்று கூட சொல்லலாம். அதற்காக, அவர் மீது வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கருத்துரிமையை மதிக்காத இந்த போக்கு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் :-(


செய்தி கீழே:

எ.அ.பாலா

***************************
சென்னை, பிப் 17 (டிஎன்எஸ்) சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது திடீரென கோர்ட்டுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள், இலங்கை தமிழருக்கு எதிராக பேசுவதால் சுப்பிரமணிய சுவாமியை தாக்கியதாக அவர்கள் கோஷமிட்டனர். தங்கள் கண் முன்னிலையிலேயே தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.

தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது. இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.

இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.

இந்த நிலையில் அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு கோருவதற்காக டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சில வழக்கறிஞர்கள், சுப்பிரமணியம் சுவாமியின் இலங்கை கருத்துக்களை ஆட்சேபித்து குரல் எழுப்பியவண்ணம் அவர் மீது அழுகிய முட்டைகளை வீசினார்கள்.

தங்கள் முன்பாகவே இந்த சம்பவம் நடைபெற்றதை கண்டித்த நீதிபதிகள், முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

அவரைப் பார்த்த, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் சிலர் ஆவேசமாக ஓடி வந்தனர்.

சுப்பிரமணியம் சுவாமியை காவல் துறையினர் பாதுகாப்பாக அவரது கார்வரை அழைத்து சென்று விட்டார்கள். (டிஎன்எஸ்)
******************************************

நன்றி: Chennaionline.com

48 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

said...

Really Good News. Thanks.

said...

Very Very good news

Give sweet all near house people

and TN CM not take any action our Brave Lawyers..

Best wises our TN Lawyers assocation Members..

Rajan BA BL
chennai High court

said...

"Really Good News. Thanks."
repeat
sangamithra

said...

//சு.சுவாமியின் ஈழப்பிரச்சினை குறித்த கருத்துகள் எனக்கும் ஏற்புடையதல்ல. சில சமயங்களில் உளறுகிறார் என்று கூட சொல்லலாம். அதற்காக, அவர் மீது வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.//

சரி. அந்த ஆள் உளறுவதை நிறுத்த மாற்று வழி என்ன? அந்த ஆளுக்கு பதவி இருக்கிறதோ இல்லையோ அதிகாரத்தின் உயர்மட்டத்தில் தொடர்புகள் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அராஜகம் செய்து வருகிறான். அவனுடைய அராஜகத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று ஒரு வழி சொல்லுங்களேன் பார்ப்போம்.

said...

இவங்களெல்லாம் வக்கீல்களா அல்லது கட்டப் பஞ்சாயத்து பார்டிங்களா ? அப்படீன்னு புரியாதவங்களுக்கு வேணா இந்த நிகழ்ச்சி ஆச்சரியத்தை கொடுக்கலாம்

Vijay said...

ஜாதிச் சண்டையில் ஒருவரையொருவர் மூர்க்கத்தனமாகத் தாக்கிகொண்ட ஜன்மங்கள் தானே நாளை வழக்குறைஞர்களாக வரப்போகிறவர்கள்? அவர்களின் முன்னோர்கள் எந்த லக்ஷணத்தில் இருப்பார்கள்?

குப்பன்.யாஹூ said...

சுப்பிரமணிய சாமி மீது எத்தனை தவறுகள் இருந்தாலும், ஜன நாயகத்தை காப்பாற்ற வேண்டிய வக்கீல்களே வன்முறையில் இறங்குவது மிகவும் அவமானம்.

எனக்கு சுப்பிரமணிய சாமியின் கருத்துக்களில் ஆயிரம் முரண்பாடுகள் உண்டு,. ஆனாலும் இன்று என் ஆதரவு இந்த வக்கீல்களுக்கு alla.

பிரச்சனைகளுக்கு வன்முறை என்றுமே தீர்வு ஆகாது.

சக வலைபதிவர்களும் வன்முறையை ஆதரித்து எழுதுவது மிகவும் வருத்தமாக உள்ளது.


குப்பன்_யாஹூ

said...

முத்துக்குமார் தீக்குளித்தது உலகம் அறிந்ததே! சுப்பிரமனிய சுவாமி அதை ஒரு கொலையாக இருக்கவேண்டும் என காவற்துறை விசாரிக்க வேண்டும் எனக் கருத்துக் கூறியிருந்தார்.

ஒன்றில் அவர் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது,
ஒரு சமூக விசமியாக இருக்கவேண்டும்.

பேச்சுரிமை அவருக்கு உண்டு என்றால், முட்டை எறிதல் ஒன்றும் கொலை முயற்சி இல்லை.

அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை முட்டாளாக்குவ‌தை ஜ‌ன‌நாய‌க‌ம் தொட‌ர்ந்து பார்த்துக்கொண்டிருக்காது.
முட்டை எறிந்த‌வ‌ர்களை அட்க்க‌ முற்ப‌ட்டால், நாளை அவ‌ர்க‌ள் க‌டும் தீவிர‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள்.
விச‌மிக‌ள்தான் தீவிர‌வாதிக‌ளை உருவாக்குகின்றார்க‌ள்.

புள்ளிராஜா.

said...

முத்துக்குமார் தீக்குளித்தது உலகம் அறிந்ததே! சுப்பிரமனிய சுவாமி அதை ஒரு கொலையாக இருக்கவேண்டும் என காவற்துறை விசாரிக்க வேண்டும் எனக் கருத்துக் கூறியிருந்தார்.

ஒன்றில் அவர் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது,
ஒரு சமூக விசமியாக இருக்கவேண்டும்.

பேச்சுரிமை அவருக்கு உண்டு என்றால், முட்டை எறிதல் ஒன்றும் கொலை முயற்சி இல்லை.

அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை முட்டாளாக்குவ‌தை ஜ‌ன‌நாய‌க‌ம் தொட‌ர்ந்து பார்த்துக்கொண்டிருக்காது.
முட்டை எறிந்த‌வ‌ர்களை அட்க்க‌ முற்ப‌ட்டால், நாளை அவ‌ர்க‌ள் க‌டும் தீவிர‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள்.
விச‌மிக‌ள்தான் தீவிர‌வாதிக‌ளை உருவாக்குகின்றார்க‌ள்.

புள்ளிராஜா.

SnackDragon said...

அழுகிய முட்டை(களை?) வீசியது எ.அ. பாலாவுக்கு 'வன்முறையை பிரயோகிப்பதாக' தெரிகிறது. முட்டை ஓடுகள் காயப்படுத்திவிடும் என்றா புரியவில்லை? சு.சாமி ஏன் தீடிரென்று இந்த கேசுக்கு வக்காலத்து வாங்குகின்றார் என்று கேட்க தோன்றவில்லை?
:-(((((

Unknown said...

முட்டை எறிதல் வன்முறையல்ல.. ! இந்த சூப்ரமனிசாமி முத்துக்குமாரின் மரணத்தை கொலை என்றது, கேவலப்படுத்தியது.. தற்கொலை, கோழைத்தனம் என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.. கொலை என்று கொச்சைபடுத்தியது இந்த சூப்புரமனிசாமி

இந்த லூசு அரசை கலைக்கவேண்டும் என்கிறது.. முட்டை வீசியதற்கு... அதுவும் கோர்ட் வளாகத்தில் கூட இல்லை.. கோர்ட்டுக்கு உள்ளே நடந்ததற்கு.. !

தமிழன் என்றாலே இந்த லூசுக்கு ஆகாது.. பிடித்து உக்காரவைத்து சானி கரைத்து ஊற்ற வேண்டும்.. ( சிட்டிசன் படத்தில் வருவது போல..)

மணிகண்டன் said...

****
முட்டை எறிந்த‌வ‌ர்களை அட்க்க‌ முற்ப‌ட்டால், நாளை அவ‌ர்க‌ள் க‌டும் தீவிர‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள்.
****
புள்ளிராஜா,

ரொம்பவே ரசிச்சேன்ங்க

அரவிந்தன் said...

இதே ச.சாமிக்கு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அதிமுக மகளிரணியால் புடவையை தூக்கி காட்டி மரியாதை செய்யப்பட்டது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்

Muthu said...

பல பின்னூட்டங்கள் பதிவின் மையக்கருத்தை ஆதரிக்காதது எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை.

முத்துகுமார் பற்றி இவர் வாந்தி எடுத்த ஒரு கருத்தே போதும்னு பலபேர் நினைக்கறாங்க. ( நானும்தான்)


சு.சாமி தீட்சீதர் வழக்கிற்காக செருப்படி வாங்கியிருந்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்? (ஹிஹி..எப்படி இருந்தாலு் வன்முறை ஏற்புடையதல்ல என்பதுதானே..சரி சரி)..

விடுங்க கோமாளி கிடக்கறான்..நன் சொல்லவந்தது என்னவென்றால்





//தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது. //


இந்த வாக்கிய அமைப்பு ஒரு நிமிடம் எனக்கு தீட்சிதர்களாலும் ஆசைப்பட்டாலும் தமிழ் பாடமுடியாம போச்சுங்கற மாதிரி தோணிடுச்சி :))

ஊர்சுற்றி said...

இவர்கள் உண்மையிலேயே கண்டிக்க மற்றும் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

said...

//ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி//

சு.சாமி எப்போது ஜனதா தள கட்சியில் சேர்ந்தார்?

அந்த ஆள் மூஞ்சியில் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறியே இல்லையே?

என்னய்யா தாக்குதல்?...ஒரு பத்துநாள் பெட் ரெஸ்ட் கூட இல்லாமல்....

said...

//அரவிந்தன் said...

இதே ச.சாமிக்கு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அதிமுக மகளிரணியால் புடவையை தூக்கி காட்டி மரியாதை செய்யப்பட்டது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்//

அது வன்முறையல்ல என்பதை அன்போடு கூறிக்கொள்கிறேன். நேற்று வக்கீல்களும் அதே போன்ற வன்முறையற்ற சனநாயக முறையில் எதிர்ப்புத்தெரிவித்திருந்தால் அகிம்சாவாதிகளுக்கு பிரச்சனையில்லை.

said...

Past event: After the Noidha killings, the lawyers, unable to bear agony, beat those charged with the crime.

-At that time, it was said by all sections, 'understandable emotion' by the lawyers.

Current event: A filthy politician comes to defend a case ruled against the oppression of the people of a state, insults the feelings and sacrifices of a state in turmoil, dismisses the casualties and supports a nazi-war on people related to the state. Yet, now, because the case is not national news and only that of Tamilians, their behavious is harsh? Rowdyism?

Rubbish.

said...

முத்து தமிழினி போன்றவர்களும், அந்த வன்முறையை நியாயப்படுத்துபவர்களுக்கும்
சரியான பதிலடியை பஜ்ரங் தள குண்டர்கள் பதிலுக்கு அடித்து உதைத்தால் புரிந்து கொள்வார்கள்.
எ.அ.பாலா எழுத்தெல்லாம் அவர்களுக்கு உறைக்காது.

enRenRum-anbudan.BALA said...

கருத்து கூறிய நண்பர்களுக்கு நன்றி. வன்முறைக்கு '-' குத்துகள் மூலம் ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி ;-)

கார்த்திக்,
//சு.சாமி ஏன் தீடிரென்று இந்த கேசுக்கு வக்காலத்து வாங்குகின்றார் என்று கேட்க தோன்றவில்லை?
:-(((((
//
அதையும் கேட்பேன், கார்த்திக், பிறிதொரு சமயத்தில் :) இப்பதிவின் நோக்கம், வன்முறைக்கு கண்டனம், அவ்வளவே !!
********************
மற்ற பின்னூட்டங்களுக்கும் எனது பதில் உண்டு. சற்று காத்திருக்கவும். நன்றி.
*******************

enRenRum-anbudan.BALA said...

//அதிகாரத்தின் உயர்மட்டத்தில் தொடர்புகள் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அராஜகம் செய்து வருகிறான். அவனுடைய அராஜகத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று ஒரு வழி சொல்லுங்களேன் பார்ப்போம்.
//
அதிகாரத்தில் / ஆட்சியில் இருப்பவர்கள் ஈழத்தமிழருக்காக என்ன கிழித்தார்கள் என்று கூறுங்கள். அவர்களையும் உதைக்கலாமா ?

ஜனநாயகத்தில் எதிர்ப்பு சொல்ல என்ன வழிகள் உண்டோ, அவற்றை கடைபிடிக்கலாம், அஷ்டே !

enRenRum-anbudan.BALA said...

//சக வலைபதிவர்களும் வன்முறையை ஆதரித்து எழுதுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
//

குப்பன்_யாஹூ,

அதுவும், கருத்துரிமை மேல் நம்பிக்கை உள்ளவராக நான் நினைக்கும் சிலர் ஆதரிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது :-(

enRenRum-anbudan.BALA said...

//பேச்சுரிமை அவருக்கு உண்டு என்றால், முட்டை எறிதல் ஒன்றும் கொலை முயற்சி இல்லை.

அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை முட்டாளாக்குவ‌தை ஜ‌ன‌நாய‌க‌ம் தொட‌ர்ந்து பார்த்துக்கொண்டிருக்காது.
முட்டை எறிந்த‌வ‌ர்களை அட்க்க‌ முற்ப‌ட்டால், நாளை அவ‌ர்க‌ள் க‌டும் தீவிர‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள்.
விச‌மிக‌ள்தான் தீவிர‌வாதிக‌ளை உருவாக்குகின்றார்க‌ள்.
//

புள்ளிராஜா,
கொலை முயற்சி என்று நான் எழுதவில்லை. அடிஉதை எந்த அளவில் இருந்தாலும், வன்முறை தான் !!!!

முட்டை எறிபவர்களை அடக்கினால், அவர்கள் பின்னாளில் தீவிரவாதிகளாக மாறும் அபாயம் இருப்பதை சுட்டியமைக்கு நன்றி ;-)

enRenRum-anbudan.BALA said...

//இந்த லூசு அரசை கலைக்கவேண்டும் என்கிறது.. முட்டை வீசியதற்கு... அதுவும் கோர்ட் வளாகத்தில் கூட இல்லை.. கோர்ட்டுக்கு உள்ளே நடந்ததற்கு.. !
//

உமது லாஜிக்குக்கு தலை வணங்குகிறேன் :-)

enRenRum-anbudan.BALA said...

அரவிந்தன்,
//இதே ச.சாமிக்கு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அதிமுக மகளிரணியால் புடவையை தூக்கி காட்டி மரியாதை செய்யப்பட்டது என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்
//
அது சரி என்று யாரும் வாதிடவில்லை !!! அதற்கும் இதற்கும் சரியாப் போச்சு என்று சொல்கிறீர்களா என்ன ?

அது ஒரு ஆபாசமான செயல், வன்முறைச் செயல் அல்ல !!!!

enRenRum-anbudan.BALA said...

//பல பின்னூட்டங்கள் பதிவின் மையக்கருத்தை ஆதரிக்காதது எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை.//

உங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டால் தான், எனக்கு ஆச்சரியம், முத்து ;-)

//இந்த வாக்கிய அமைப்பு ஒரு நிமிடம் எனக்கு தீட்சிதர்களாலும் ஆசைப்பட்டாலும் தமிழ் பாடமுடியாம போச்சுங்கற மாதிரி தோணிடுச்சி :))
//
இது சூப்பர் பஞ்ச் :-)

enRenRum-anbudan.BALA said...

//முத்து தமிழினி போன்றவர்களும், அந்த வன்முறையை நியாயப்படுத்துபவர்களுக்கும்
சரியான பதிலடியை பஜ்ரங் தள குண்டர்கள் பதிலுக்கு அடித்து உதைத்தால் புரிந்து கொள்வார்கள்.
எ.அ.பாலா எழுத்தெல்லாம் அவர்களுக்கு உறைக்காது.
//
இல்லை நண்பரே, 2 wrongs never make a right !

enRenRum-anbudan.BALA said...

//என்னய்யா தாக்குதல்?...ஒரு பத்துநாள் பெட் ரெஸ்ட் கூட இல்லாமல்....
//

என்ன மாதிரி நல்ல எண்ணம் உங்களுக்கு ???

enRenRum-anbudan.BALA said...

//Current event: A filthy politician comes to defend a case ruled against the oppression of the people of a state, insults the feelings and sacrifices of a state in turmoil, dismisses the casualties and supports a nazi-war on people related to the state. Yet, now, because the case is not national news and only that of Tamilians, their behavious is harsh? Rowdyism?

Rubbish.
//
S Swamy's talking and attitude may be rubbish but your justification of violence against him is equally rubbish, if not more !!!

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by the author.
said...

Anonymous has left a new comment on your post "525. சுப்பிரமணிய சுவாமியைத் தாக்கி நீதிமன்றத்தில் ...":

******************
ஒரு குறிப்பிட்ட சமூகம் என்பதினாலேயே பலரும் கண்டபடி பேசுகிறான்கள். முத்து தமிழினி கூட அவன் இவன் என்று பேசுவதற்கு காரணம் (<<<< EDITED>>>>>) வேறென்ன? சம்பவத்தில் ஈடுபட்ட அத்தனை வக்கீல் கம்னாட்டிகளின் வக்கீல் தொழில் செய்வதை ரத்து செய்து கோமணத்துடன் ஓட ஓட விரட்ட வேண்டும்.
************************

Posted by Anonymous to தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா at 11:06 AM, February 18, 2009

said...

முட்டை அடிப்பு, தக்காளி வீசல்

ஆஹா என்ன ஒரு வரவேற்பு, என்ன ஒரு மரியாதை. இவர்கள் போராடியது வேறு விஷயத்திற்கு. ஆனால், சுப்ரமணிய சுவாமியை பார்த்தவுடன், ஜட்ஜ் முன்னிலையிலே தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.

அப்போ, ஆட்சியாளர்கள் செய்யும் எல்லா விஷயங்களும் பொது மற்றும் பரவலான ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?? இல்லை என்றால், அவர்களுக்கும் இது போன்று தர்ம அடி தரப்படுமா?? கண்டிப்பாக மாட்டாது. ஏனெனில், அவர்கள் திருப்பி அடிப்பதை, இவர்களால் காணமுடியாது. நேரே மேலே போறதுக்கு டிக்கட் தான். ....

தங்கள் தொகுதி எம்.எல்.ஏ. தன் தொகுதிக்கு ஏதும் செய்யவில்லை. ஆனால், இந்த பாழாய் போன ஜனங்களுக்கு அவரை கேட்க தைரியம் இல்லை. சுப்ரமணிய சுவாமியை அடித்தார்களாம்.

நல்லா இருக்குயா உங்க வீரம். .........

ஆனால், ஒன்று மட்டும் உறுதி. இந்த ஊரில் தர்ம அடி தர்மலிங்கங்களுக்கு பஞ்சமில்லை. ........

எதற்கெடுத்தாலும் பெரியாரை சப்போர்ட்டுக்கு இழுத்து, மற்றவர்களை திட்டி தீர்க்கும் மக்களே .... இது போன்ற வன்முறை செய்வதற்கு முன்னால் மஹாத்மா காந்தியையும் ஒரு நிமிஷம் நினைத்து பாருங்களேன்...... அப்புறமும் இந்த வன்முறையில் ஈடுபடுவீர்களா அல்லது அவரின் வழியான அஹிம்சையை பின்பற்றுவீர்களா என்று????

இந்த பதிவை எதிர்த்து எவ்ளோ எதிர்பதிவு வரப்போகுதோ??

வாழ்க ஜனநாயகம் ....... வளர்க உங்கள் தீவிரவாதம் .........

said...

சரியான கருத்துக்கள்!!

இதுவே என்னுடைய கருத்தும்.


வாழ்த்துக்கள் நண்பரே!!

Muthu said...

//முத்து தமிழினி போன்றவர்களும், அந்த வன்முறையை நியாயப்படுத்துபவர்களுக்கும்//

??

இந்த ஆள் கோமாளி இல்லை என்கிறாரா இந்த அனானி?

சு.சாமிக்காவும் அவருடைய கருத்துரிமைக்காகவும் நீங்கள் போராடுவதும் எனக்கு சிலிர்க்குது போங்க :)

எந்த அடிப்படையில் என்பதும் தெரிந்துதான் இருக்கிறது.

said...

புலிகளை ஆதரிக்க தொடங்கிய தமிழ்நாட்டில் இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நடக்க இருக்கிறது. புலிகளை ஆதரித்தனால் ஏற்பட்ட கொடும் விளைவுகளை இலங்கை தமிழர்கள் இன்று வரை அனுபவிக்கிறார்கள்.

said...

nalla seithi

said...

ஒரு முட்டைக்கே இந்த அலறு, அல்றும் பாப்பான்கள், அங்கு நம் தமிழர்கள் தினமும் நூற்றுகணக்கில் அழிவதை ஆதரிப்பதேன்.

said...

Muthukumar's death is politicised for few parties personal cum political gain. The people living around his house knows whats behind.

When suicide itself is an offense how cum a sucider can become a hero

pls donot be dragged by what these politicians says.

said...

இந்த கூமுட்டைக்காக ஒரு பக்கத்தயும் உம்ம பக்கத்தையும் பழுதாக்கிவிட்டீரே... உமக்கும் முட்டை அடிக்கப்பட்டாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை...

-ரவுசு

said...

Bala

Our bloggers are good at provoking violence sitting safe inside their houses and far away from the spot.

Anywhere in tamilnadu any violence happens either communal, or against individual you can get N no of supporting comments.

Our people aren't yet educated.

-mangai

enRenRum-anbudan.BALA said...

//ஒரு முட்டைக்கே இந்த அலறு, அல்றும் பாப்பான்கள், அங்கு நம் தமிழர்கள் தினமும் நூற்றுகணக்கில் அழிவதை ஆதரிப்பதேன்.
//

சிலர் (அதுவும் அவர்கள் பிரபலமாக இருந்து அவர்கள் பேசுவது செய்திகளில் வருவதால்!) சிங்கள அரசை ஆதரிப்பதை வைத்துக் கொண்டு, உம்மைப் போன்றவர்கள் இப்படி (மொத்தமாக குற்றம் சாட்டி) உளறுவது தான் காமெடியாக உள்ளது. பார்ப்பனர் அல்லாதவர் அனைவரும் (100%) ஒத்த கருத்து உடையவர்களா?

"நம் தமிழர்கள்" என்று வாய் கிழியப் பேசும் உம்மைப் போன்றவர்கள் ஈழத்தமிழருக்காக என்ன எழவு செய்து விட்டீர்கள்?

முதலில் போரை நிறுத்த வழி பார்க்கலாம், பார்ப்பன வசை பாடுதலை அப்புறம் எப்ப வேணா வச்சுக்கலாம் :-(

enRenRum-anbudan.BALA said...

R.gopi,

அருமையான கருத்து, வரவுக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

mangai,
//Our people aren't yet educated.
//

They are not "educated" in the right sense of the word !

said...

Subramania samy is anti tamil because

1. He was the one who had put case against the kerala govt. on mullai periyar issue and because of him the SC had given a verdict in favour of tamil nadu.

How dare he can do such a filthy useless thing to tamils? If he had born to a single father he should have made blood of Atchudanandhan flow in mullai periyar without doing such a brave thing that coward had put case against kerala in SC shame on him. For this reason alone his jetti should have been pulled out and he should have been made to run naked in the court room.

2. He put a case in the high court to get 2% reservation for eelam tamil refugees in Tamilnadu when all the politicians had forgotten about that. How the f**** he can do that stuff? He is a "ena" drohi for doing such a stuff.

RAJI MUTHUKRISHNAN said...

However evil a person may be, however thoughtless and self-serving, I personally feel that lawyers, who make up future judges and magistrates, and the judiciary, should not descend to the level of rowdyism.

The judiciary of the future is in the hands of rowdy elements or lawyers?

Protests may be showed as that great Mahathma of our county taught us - with non-violence. But who remembers him?

said...

தமிழ்நாடு உருப்பட்டுடும்.. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்கள் தாங்கள் அம்பேத்கார் காலேஜ் குண்டர்களின் சீனியர்கள் தான் அப்டின்னு நிரூபிச்சு இருக்காங்க..அதைப் பாராட்ட நூறு பேரு வேற..தூ....
//முத்துக்குமார் தீக்குளித்தது உலகம் அறிந்ததே! சுப்பிரமனிய சுவாமி அதை ஒரு கொலையாக இருக்கவேண்டும் என காவற்துறை விசாரிக்க வேண்டும் எனக் கருத்துக் கூறியிருந்தார்.

ஒன்றில் அவர் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது,
ஒரு சமூக விசமியாக இருக்கவேண்டும்.//

விடுதலைப்புலிகள் புராணம் பாடிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டவர் அதுல கையெழுத்து போட மாட்டாராம்..இதை தற்கொலைன்னு நம்பணும்..இந்தத் தீக்குளிப்பு நாடகங்கள் எல்லாமே திராவிடக் கட்சிகள் ஆரம்பிச்சு வெச்ச தீவைப்புகள் தான். இதை தற்கொலைன்னு சொல்லி, அப்டியே அது தற்கொலையா இருந்தாலும் இந்த முட்டாள்தனத்தை வீரம்னு புகழற ஒரு கும்பல் வேற.. தூ..


இப்படி கோர்ட்லயே சட்டத்துக்கு எதிரா நடந்துக்கிட்ட வக்கீல்களின் லிஸ்ட் எடுத்து இவங்க இனிமே வக்கீல் தொழிலே பண்ண முடியாம இவங்களோட வக்கீல் உரிமத்தை ரத்து செய்யணும்..

ஓகை said...

//பல பின்னூட்டங்கள் பதிவின் மையக்கருத்தை ஆதரிக்காதது எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை.

முத்துகுமார் பற்றி இவர் வாந்தி எடுத்த ஒரு கருத்தே போதும்னு பலபேர் நினைக்கறாங்க. ( நானும்தான்)//

சுவாமியை அவமதிப்பதற்கும் அல்லது அவரது நடவடிக்கைகளை எதிர்ப்பதற்க்கும் எடுக்கப்பட்ட 'நடவடிக்கைகள்' தமிழ்நாட்டில் அமைதியான வாழ்க்க்கைக்கு அவநம்ம்பிக்கை தோற்றுவிப்பதாக இருக்கின்றன. நீதிமன்ற வளாகத்தில் இவ்வாறு தங்கள் எதிர்ர்பை தெரிவிப்பதன் மூலம் நீதி மன்றத்தையும் அவ்வமைப்பின் மீதிருக்கும் மரியாதையையும் சேர்த்தே அவமதிக்கின்றனர். இந்நிகழ்வின் மீது அவர்கள் சுவாமியின் மீதுள்ள எதிர்ர்ப்பை தெரிவிக்கவில்லை. மாறாக எங்களால் எதையும் எங்கேயும் செய்யமுடியும் என்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள். வன்முறை விரும்பிகளுக்கு ஏற்புடையதாகவும் சிலாகிக்கத் தகுதியுள்ளதாகவும் இருக்கும் இம்மாதிரியான நிகழ்வுகள் பொது மக்களுக்கும் பொதுப்புத்திக்கும் கேடும் ஆபத்தும் விளைவிப்பவை. இதை பற்றிய கவனம் கருதத்தக்கதாகக் கொள்ளப்படவில்லை. சுவாமி தாக்கப்ப்ட்டார் என்று மட்டும் நிறைவடைபவர்கள் நீதிமன்ற நடைமுறையும் தாக்கப்பட்டிருப்பது பற்றி பிரக்ஞை இல்லாதிருப்பதோடு குமுகாயத்தின் நல்வாழ்வு ஒரு பொருட்டே அல்ல என்பதையும் வலியுறுத்துகிறார்கள்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails